Quote from: Paari on Apr 04, 2025, 03:24 PMஎன்னுடன் பேசி!
கொண்டிருக்கும் தோழிகளை!
பிரித்து அழைத்து சென்று!
விடுகிறாய் !
நான் மேடை ஏறவிருந்த சமயம்!
மின்சாரம் போய்விட்டதில்!
மகிழ்ச்சி கொண்டு சொல்லி!
திரிகிறாய் !
தேர்வுகளில் உன்னைவிட!
மதிப்பெண் குறைய பெற்றால்!
என் திறமையை எள்ளி!
நகையாடுகிறாய் !
தேர்வுகளில் உன்னைவிட!
மதிப்பெண் அதிகம் பெற்றால்!
தேர்வுதாளை பறித்து மறுமதிப்பீடு!
செய்கிறாய் !
என் தண்ணீர் பாட்டில் நீரை முழுவதும்!
வகுப்புதோழி மிச்சம் வைக்காது!
குடித்துவிட்டது கண்டு கை கொட்டி !
சிரிக்கிறாய் !
என் சின்ன இழப்புகள் கூட!
உனக்கு பெரிய மகிழ்ச்சி தருகிறது!
என் சின்ன சின்ன சந்தோஷம் கூட!
உனக்கு பெரும் கோபத்தை உண்டாக்கிறது. !
உன்னை எனக்கு தெரியாத!
உனக்கு எனனை தெரியாத !
வேளையில் நாம் இருவரையும்!
சரியா தெரியாதஒருவர்!
எனது மேல்நிலை பள்ளி மதிப்பெண்ணை சொல்லி!
உன்னை அவமானபடுத்தியதற்கு!
என்னை பழிபீடத்தில் வைப்பது நியாயமா!
தோழி !
Quote from: Paari on Apr 04, 2025, 03:36 PMகாலத்தின் படிகளில் பின்னோக்கிச் சென்று!
உற்று நோக்கி, உண்மையான உருவத்தை!
ஒரு கேள்வி கேட்க!
கண் விழித்து!
கனவுகளைத் தொலைத்து!
தொடங்கும் ஓர் ஆன்மீகப் பயணம் !
நிகழ்கால என்னை, கடந்த கால நான்!
எதிர் கொண்டு,!
பேசத் தயங்கி,!
உள்ளம் நடுங்க,!
கேட்ட ஒரே கேள்விக்கு விடை என்ன?!
எங்கே என்னைத் தொலைத்தாய்? !
விடை தேடி மீண்டும் தொடங்கும்!
ஆத்மார்த்த யாத்திரை!
கட்டுங்கடங்காத காலம்!
எட்டுத்திக்கிலும் எண்ணம்!
தட்டுத்தடுமாறி தொடங்கிய!
வாழ்வின் முடிவில் பயணம் !
எவனோ ஆகும் முயற்சியில் முதல் தோல்வி!
இவனோ எனும் கேள்விக்கு விடை தேடி!
அவனும் அப்படித்தான் எனும்!
சமூக விதிக்குட்பட்டு!
வரையறை தாண்டியவர் கண்டு பெருமூச்சு விட்டு!
இதுதான் எனும் தொடக்கத்தில் முடிவுறும் பயணம்!
Quote from: Paari on Apr 04, 2025, 03:38 PMஉனக்கான நாட்களில்
கொஞ்ச நேரம் உன் மனதுடன்
கோபித்துக் கொள்ளலாம்..
யாருக்கும் தெரியாமல்
கண்ணாடி முன்
ராம்ப் வாக் செல்லலாம்..
சிரித்துக் கொண்டே அழலாம்
அழுது கொண்டே யாருக்காகவோ
சிரிக்கலாம்...
உனக்கான கவிதைகளை நீயே எழுதிக்
கொள்ளலாம்
எதிர்கால கனவுகளை உன் மனதுக்குள் அசைபோட்டுக் கொண்டே டோப்பமின்னை சுரக்க வைக்கலாம்
கடந்த கால கசப்புகளை சிறிது சிறிதாக வடிகட்டி உனக்கான தெரபிஸ்ட் ஆக நீயே ஆகலாம்...
மல்லாந்து படுத்துக் கொண்டு
அலைபேசியில் கிசு கிசுகள் பேசலாம்..
பிடித்த புத்தகத்தின் தூண்டிலில்
மீண்டும் ஒரு முறை சுகமாக மாட்டிக் கொள்ளலாம்...
மைக்கல் ஜாக்சனாகவே மாறி பீட் இட்
பாட்டுக்கு உனக்கு தெரிந்த வரிகளை உரக்க பாடிக் கொண்டே வெஸ்டர்ன் ஆடலாம்...
உன் வீட்டின் மூலையில்
உனக்காகவே காத்திருக்கும்
ரோஜா மலரை மெல்ல முத்தமிடலாம்...
ஒரு வேளை எழும்ப மனமில்லாமல்
அந்த நாளை கட்டிலிலேயே கழிக்க
விரும்பினால் ...
உன்னை நீயே அணைத்துக் கொண்டு
உன் பாரங்களை தலையணையிடம்
தந்து விட்டு நிம்மதியாக உறங்கி விடு
நாளை உனக்காகவே காத்திருக்கும்....