முகம் எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்க

Started by Paari, Apr 04, 2025, 03:58 PM

Previous topic - Next topic

Paari

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான சருமம் இருக்கும். அந்த சருமத்திற்கு ஏற்றார் போல் நாம் பயன்படுத்தக்கூடிய ஃபேஸ் பேக், கிரீம் போன்றவற்றை தேர்வு செய்ய வேண்டும். ஒரு வேளை மாற்றி தேர்வு செய்து விட்டோம் என்றால் நம்முடைய சருமத்திற்கு பலவிதமான பாதிப்புகள் உண்டாகும். அதனால் ஒவ்வொரு முறையும் நம்முடைய சருமத்தை பாதுகாப்பதற்காக நாம் மேற்கொள்ளக்கூடிய எந்த முயற்சியாக இருந்தாலும் அதில் கண்டிப்பாக முறையில் நம்முடைய சருமத்தின் வகையை பொறுத்து பொருட்களை தேர்வு செய்து பயன்படுத்த வேண்டும். இன்னும் சில பொருட்கள் இருக்கின்றன. இவை எந்த வகையான சருமமாக இருந்தாலும் அதற்கு பொருத்தமாக அமையும். அப்படிப்பட்ட பொருட்களை பயன்படுத்தி தயாரிக்க கூடிய ஒரு ஃபேஸ் பேக்கை பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். முகத்தை கழுவிய பிறகு முகம் புத்துணர்ச்சியுடன் திகழும். ஆனால் முகம் கழுவி சிறிது நேரம் ஆனவுடன் முகத்தில் ஒருவித சோர்வு உண்டாகிவிடும். கலை இழந்து காணப்படும். அப்படிப்பட்ட முகத்தை கலையுடனும், புத்துணர்ச்சியுடனும், பிரகாசமாகவும் மாற்றுவதற்கு வீட்டில் இருக்கக்கூடிய எளிமையான பொருட்களை வைத்து ஒரு ஃபேஸ் பேக்கை நாம் தயார் செய்யலாம். இந்த பேஸ் பேக்கை தொடர்ச்சியாக நாம் பயன்படுத்துவதன் மூலம் எப்பொழுதுமே புத்துணர்ச்சியுடன் பிரகாசமாகவும் திகழ முடியும்.